US DV (Diversity Visa) Lottery Visa 2026
The Department of State annually administers the statutorily created Diversity
Immigrant Visa Program. Section 203(c) of the Immigration and Nationality Act
(INA) provides for a class of immigrants known as “diversity immigrants” from
countries with historically low rates of immigration to the United States. For Fiscal
Year 2026, up to 55,000 Diversity Visas (DVs) will be available
NOTE: அமெரிக்க லொத்தர் விசாவுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தினூடாக அக்டோபர் 2 ஆந்திகதி இலங்கை நேரப்படி இரவு 9 மணி முதல் நவம்பர் 5 ஆந்திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
நிச்சயமாக உங்களால் ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் கிடையாது. 2026 கிரீன் கார்ட் விண்ணப்பத்தை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 2024 முதல் நவம்பர் மாதம் 5-ம் தேதி 2024 வரை உங்களால் சமர்ப்பிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமில்லை. இலங்கையில் அனைவரும் சாதாரணமாக பயன்படுத்தும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பிட்ட கிரீன் கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்க உயர்தர தகமை போதுமானது அல்லது அதற்கு சமமான தகமை கொண்டவர்கள் அல்லது கடந்த ஐந்து வருடங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தொழிலில் உங்களுக்கு இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியமானது. உங்கள் கல்வி மற்றும் வேலை அனுபவம் தொடர்பான சான்றிதழ்களை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
கிரீன் கார்ட் க்கான விண்ணப்பத்திற்கு எவ்விதமான கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஆன்லைன் மூலம் உங்களிடம் யாரும் கட்டணம் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் அவர்களிடமிருந்து அவதானமாக இருக்கவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பான முழு விவரங்களையும் கவனமாக வாசித்து அவற்றை உள்வாங்கி உங்களுடைய விண்ணப்பங்களை நிரப்பும் பொழுது சரியான முறையில் நிரப்ப வேண்டும்.
உங்கள் நுழைவு படிவத்தில் கீழ்வரும் தகவல்களை சரியான முறையில் நீங்கள் நிரப்ப வேண்டியது அவசியம்.
தகவல்கள்
உங்கள் நுழைவு படிவத்தில் கீழ்வரும் தகவல்களை சரியான முறையில் நீங்கள் நிரப்ப வேண்டியது அவசியம்
- முழுப்பெயர் (உங்கள் பாஸ்போர்ட் / NIC இல் இருப்பது போல)
- பிறந்த திகதி
- பாலினம்
- கட்டணம் செலுத்தும் நாடு
- நகரம் மற்றும் பிறந்த நாடு
- சரியான முறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்
- மின்னஞ்சல் முகவரி
- தற்போதைய வசிக்கும் நாடு
- தொலைபேசி இலக்கம் (விரும்பினால் மட்டும்)
- உங்கள் கல்வி தகைமை
- திருமண நிலை
- திருமணமாகாத மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகவல்கள்
- மனைவியின் பெயர் மற்றும் தகவல்கள்
புகைப்படம் எடுக்கும் போது முக்கிய கவனம் செலுத்துங்கள்:
- முன்பு இந்த விசாக்கு விண்ணப்பிக்க உபயோகித்த புகைப்படம் உபயோகிக்க வேண்டாம்.
- பழைய படம் உபயோகிக்க முடியாது.
- இதற்கு நீங்கள் உங்கள் போஃனில் சரியாக கீழ் கண்ட instruction க்கு ஏற்ப எடுத்த படத்தை கூட உபயோகிக்கலாம்.
- கலர் போட்டோ, clear photo..படம் JPEG வடிவத்தில் இருத்தல்.
- உங்கள் தலை படத்தின் 1-1 1/3 ” inch (22 mm – 35 mm) இற்குள் வரணும் 2″ × 2″ 300 pixels per inch digital photo.
- கண்ணாடி, தொப்பி போட்டிருக்க முடியாது. சமய காரணம் தவிர தலைமுடியை மறைக்க கூடாது.
- நிழல் விழுந்திருக்க கூடாது.
- படத்தில் நீங்கள் சிரிக்கவோ முறைக்கவோ கூடாது.
- சாதாரணமாக போடும் சேர்ட் சட்டையுடன் எடுக்கலாம்.
- கண்கள் மூடாமல் திறந்து இருக்கவேண்டும்.
- மத நம்பிக்கை காரணமாக அணிந்திருக்கும் தொப்பி அல்லது COVER கொண்ட புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
- அதிகபட்ச படங்களின் அளவு 240 கிலோ BYTE(KB) இருக்க வேண்டும்.
- படங்களின் பரிமாண அளவுகள் 600 பிக்சல்கள் அகலம் மற்றும் 600 பிக்சல்கள் உயரம் இருக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பங்களை அமெரிக்க அரசின் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணையதளம் வாயிலாக நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க உங்களுக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்படும். 60 நிமிடங்களுக்குள் உங்களால் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனால், மீண்டும் ரீஃபிரஸ் ஆகும். புதிதாக நீங்கள் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு தடவை மட்டுமே குறித்த கிரீன் கார்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம், அதாவது கன்ஃபர்மேஷன் நம்பர் உங்களுக்கு கிடைக்கும். அதனை பத்திரமாக குறிப்பெடுத்து அல்லது போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மே மாதம் 2025 முதல் அமெரிக்க அரசின் இணையதளத்தில் உங்கள் குறிப்பிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இலக்கத்தை கொடுத்து, நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதை பார்க்க முடியும்.
விண்ணப்பிக்கும் போது நீங்கள் கொடுக்கும் ஈமெயில் முகவரி, நீங்கள் தொடர்ச்சியாக பாவிக்க கூடியதாகவும் நிரந்தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அனைத்து தொடர்பாடல்களும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியும். இருவரில் ஒருவர் தகுதி பெற்றால், மற்றவர் நேரடியாக தகுதி பெறுவார்.
லாட்டரியில் தெரியப்பட்ட அதிஷ்ட விண்ணப்பதாரிகள் dvprogram.state.gov என்ற வலைதளத்தில் உங்கள் confirmation number மூலம் உங்கள் விண்ணப்பம் செலக்ட் செய்யபட்டதா இல்லையா என அறியமுடியும்.
பயப்படாமல், நிதானமாக விண்ணப்பத்தை சரியாக நிரப்புங்கள். நாளைக்கு செய்யவம் எண்டு தூக்கிபோட்டுட்டு, கடைசி நாள் அந்த browser சுத்திட்டு இருக்கும் போது தலையை பிய்க்காமல் இப்போதே அனுப்புங்கள்.